இலங்கையில் அதிபர் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள்

இலங்கையில் அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். டக்லஸ் தேவானந்தா மீன்வளத் துறை அமைச்சராகவும் விமலவீர திச நாயக வனத்துறை அமைச்சராகவும் சன்ன ஜெசுமான சுகாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் இந்த மாத தொடக்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்த நிலையில் 17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அமைத்துள்ளார். அதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
Tags :