இமாச்சலில் 400 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, காணாமல் போனார்கள். இதுபற்றி மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஜெகத் சிங் நேகி கூறுகையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய பருவமழையால் மாநிலத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனுடன் தொடர்புடைய வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடரால் 400 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்தார்.
Tags :