கலை, அறிவியல் முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கு அக்.4 முதல் கல்லூரிகள் தொடக்கம்

by Editor / 30-09-2021 08:25:14pm
கலை, அறிவியல் முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கு அக்.4 முதல் கல்லூரிகள் தொடக்கம்


கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.


முன்னதாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை, நவம்பா் 1 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via