புதுச்சேரி -நீதிமன்ற உத்தரவுப்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. 

by Editor / 17-10-2024 11:56:59pm
புதுச்சேரி -நீதிமன்ற உத்தரவுப்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. 

புதுச்சேரி மாநிலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க படும் என்றும் அதன்படி காலை 06 மணிமுதல் 7 மணி வரை மட்டுமே என்றும் இரவு 07 மணிமுதல் 08 மணி வரை மட்டுமே அனுமதிக்க படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைதியான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிப்பாட்டு தலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க கூடாது என புதுச்சேரி சுற்றுசூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : புதுச்சேரி -நீதிமன்ற உத்தரவுப்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. 

Share via