திருப்பூரில் 1000 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பண்டைய கொங்கு மண்டல வரலாற்றில் கொங்கு வஞ்சியான விராட்புரம் எனவும், பராந்தகபுரம் எனவும், ராசராசபுரம் எனவும் அழைக்கப்பட்ட தாராபுரத்துக்கு கொங்கு மண்டலத்தில் ஏனைய நகரங்களுக்கு இல்லாத தனிப்பெருமையும், வரலாற்றுச் சிறப்பும் உண்டு. இடைக்காலத்தில் இங்கு ஆட்சி செய்த கொங்குச்சோழர்களின் தலைநகரமாகவும் "தாராபுரம் விளங்கியுள்ளது. -வற்றாத வளம் கொழிக்கும் "கொங்கு மண்டலத்தில் அமராவதி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இந்த சிறப்பு மிக்க நகரம் பண்டைய வஞ்சிப்பெருவழி யில் அமைந்திருந்ததால் —வணிகத்திலும் சிறப்புற்று விளங்கியது.
இந்த தகவல் கல்வெட்டு "கள் மூலம் அறிய முடிகிறது. மேலும் திருப்பூரில் -இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் கூ. ரவிக்குமார். இரா. குமரவேல், க. பொன்னுச்சாமி மற்றும் ந. சுதாகர் ஆகியோர் "தாராபுரம் கோட்டைமேட்டுப் பகுதியில் சுமார் 1000 ஆண்டு பழமையான அத்திகோசத்தார் வணிகக் குழுவின் சின்னங்கள் பொறித்த கல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
அத்திகோசம்
சங்க இலக்கியங்கள் பல வணிகச்சாத்துகள் பற்றிப்பேசுகின்றன. வணிகர்கள் தங்கள் பாதுகாப்புக்கு வைத்திருந்த படைகள் கூடத்தங்களுக்கென குழுக்கள் வைத்திருந்தனர். இவ்வாறு நிலை பல்வேறு குழுக்களில் அத்திகோசமூம் ஒன்று. அத்திகோசத்தார் பற்றிய கல்வெட்டுகள் பெருவழி ஓரத்திலேயே கிடைக்கின்றன. பெருவழிகளில் வணிகப்பாதுகாப்புக்சகாக நிறுத்தி வைக்கப்பட்ட யானை, காலாட்படைகளின் தலைவர்களின் குழுக்களே அத்திகோசம், விரகோசம் என்பனவாகும். பெருவழி களில் படைவீரர்கள் தங்கியிருந்து வணிகர்களிடம் சுங்கம் வாங்கவும், வணிகர்களைக்கள்வர்கள் இடம் இருந்து காக்கவும் ஆகும். மேலும் பெருவழி ஓரத்தில் உள்ள ஊர்களில் செய்யப்படுகின்ற தானத்தினைச் செயல் படுத்தவும், பாதுகாக்கவும் இவர்கள் வேண்டப்படுகின்றார்கள்.
தாராபுரத்திலும் பண்டைய பெருவழி ஓரத்தில் உள்ள கோட்டை மேட்டில் 115 செ. மீ உயரமும், 75 செ. மீ அகலமும் கொண்ட அத்தி கோசத்தார் சின்னங்கள் பொறிக்கப்பட்ட கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மேல் வரிசையில் யானை, குதிரை, பசும்பைக்கட்டு (பணப்பை), கீழ் வரிசையில் சிறிய உளி, அளவு கோல் அங்குசம் கோடரி, இருவகை அரிவாள்கள், சாட்டைக்கயிறு, மரச்சுத்தியல் பெரிய உளி மற்றும் மழு என மொத்தம் 13 சின்னங்கள் உள்ளன. யானை மற்றும் குதிரைச்சின்னங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால் இவை இடைக் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய அத்திகோசம் வீரகோசம் குழு வைச் சேர்ந்தவை ஆகும். எழுத்துப்பொறிப்பில் லாத இந்தச் சின்னங்கள் கி. பி. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் ஆகும் என தெரிவிக்கின்றனர்.
Tags :