கேள்வி கேட்டதற்காக தகுதி நீக்கம்- பிரியங்கா காந்தி

by Staff / 12-04-2023 12:49:09pm
கேள்வி கேட்டதற்காக தகுதி நீக்கம்- பிரியங்கா காந்தி

பாஜக பதிலளிக்க முடியாத கேள்வி கேட்டதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா கூறியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசை பிரியங்கா கடுமையாக விமர்சித்தார். ஒட்டுமொத்த அரசும் கெளதம் அதானியை பாதுகாக்க முயல்கிறது. நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்று குற்றம் சாட்டிய பிரியங்கா இந்த ஆட்சியில் சாதாரண மக்களின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் வேலைக்காக போராடுகிறார்கள்" என்றும் பேசியுள்ளார்.

 

Tags :

Share via

More stories