புதுச்சேரி முன்னாள் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் கோரிக்கை

by Staff / 01-06-2022 02:25:08pm
புதுச்சேரி முன்னாள் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் கோரிக்கை

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் உள்ள நல்லம்பல் நூலாறு ஐந்து கண் மதகை இடித்து புதுப்பிக்கும் பணியின் காலதாமதத்தால் காரைக்காலுக்கு வரும் காவிரி நீர் தாமதம் ஆகும் நிலை.பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவும் துரிதமாக மதகு அணையை புதுப்பிக்கும் பணியினை முடிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முன்னாள் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் மேட்டூரில் தமிழக முதல்வர் கடந்த வாரம் காவிரி நீரை திறந்து வைத்ததுடன் கல்லணையிலும் சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீரானது ஒரு வார காலத்திற்குள் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதிக்கு வந்துவிடும்.அவ்வாறு காரைக்கால் பகுதிக்கு முதலாவதாக காவிரி நீர் வரும் பகுதி திருநள்ளாறு தொகுதி நல்லம்பலில் உள்ள நூலாறு ஐந்து கண் மதகு ஆகும்.இந்த ஐந்து கண் மதகினை புதுப்பிக்க கடந்த ஆட்சியிலேயே நிதி ஒதுக்கீடு செய்த போதும் அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக எந்த பணியும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் நூலாறு ஐந்து கண் மதகு அணையை புதுப்பிக்கும் பணியை துவக்கிய பொதுப்பணித்துறை பாதி வேலையை கூட இதுவரை முடிக்கவில்லை.தற்போது காவிரியில் திறக்கப்பட்ட நீரானது குடந்தை சாக்கோட்டை பகுதியில் திறந்து விடப்பட்டால் ஓரிரு தினங்களில் காரைக்காலுக்கு காவிரி நீர் வந்துவிடும்.அவ்வாறு வரும் நீரை தேக்கி வைக்கவோ பாசனத்திற்கு திறந்து விடவோ மாற்று ஏற்பாடுகளும் செய்யாத நிலையில் திருநள்ளாறு தொகுதியில் குறுவை சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்படும்.மேலும் நூலாறு நீரை சேமித்து வைக்க நல்லம்பல் ஏரியினை தூர்வாரும் பணி கடந்த ஆண்டு துவங்கியும் இது வரை முழுமையடையவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த ஆண்டு காவிரி நீரானது காரைக்கால் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்குமா என விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.     

 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:  பொதுப்பணித்துறையினர் காலதாமதமாக பணிகளை துவக்கி பணியையும் விரைவாக செய்யாத நிலையில் காவிரி நீரை நூலாறு வழியாக பெற முடியுமா என்ற சந்தேகம் உள்ளது என்றும் இனியும் தாமதிக்காமல் பொதுப்பணித்துறையினர் முழுவீச்சில் கதவணை பணிகளை முடித்து,ஆற்று வாய்க்கால் கரைகளை பலப்படுத்தும் பணியினை முடித்தால் தான் காவிரி நீரை பெற முடியும் என்றார். மேலும் இந்த ஆண்டு கல்லணையில் காவிரி நீர் திறக்கும் நிகழ்விற்கு புதுச்சேரி அரசு சார்பிலும், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாயிகள் சார்பிலும் யாரும் பங்கேற்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காரைக்காலுக்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும்,பாசிக் நிறுவனம் மூலம் காரைக்காலில் விவசாயிகளுக்கு உரம்,விதைநெல்,இடுபொருட்கள் கிடைத்திட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.
 

 

Tags :

Share via