இந்தியா பெயரைக் கேட்டாலே பாஜக அலறுகிறது முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

by Staff / 28-08-2023 02:21:30pm
இந்தியா பெயரைக் கேட்டாலே பாஜக அலறுகிறது  முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பாஜக அரசுக்கு எதிராக 26 கட்சிகள் அடங்கிய ‘INDIA’ கூட்டணியின் கூட்டம் இருமுறை நடந்துள்ளது. மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக்கூடிய நிலை உருவாகியுள்ளது. உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது. அந்த INDIAதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திகழும்” என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

Tags :

Share via

More stories