பத்தாம் வகுப்பு-பதினொன்றாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவு மே 19-இல் வெளியீடு

by Admin / 15-05-2023 06:32:48pm
பத்தாம் வகுப்பு-பதினொன்றாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவு  மே 19-இல் வெளியீடு

 நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி காலை10.00மணிக்கு வெளியிடப்படுகிறது அன்றே மதியம் 2 மணி அளவில் பதினொன்றாம் வகுப்பிற்கான தேர்வு முடிவும் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

: மேல்நிலை முதலாம் ஆண்டு பொது தேர்வு 14..3..2023 அன்று தொடங்கி 5. 4. 2023 வரை நடைபெற்றது. 7600 பள்ளிகளில் பயிலும் 8 லட்சத்தி ஐம்பதாயிரம் மாணவர்கள் 369 தேர்வு மையங்களில் எழுதினர் .

பத்தாம் வகுப்பு பொது தேர்வு 6. 4. 2023 அன்று தொடங்கி 20. 4. 2023 வரை நடைபெற்றது இத்தேர்வு 12,800 பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்கள் 3986 தேர்வு மையங்களில் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது

 

பதிவெண்,பிறந்த தேதியை பதிவுசெய்து தேர்வு முடிவை அறியலாம்.

 

இணையதள முகவாி.-www.tnresults.nic.in ,www.dge.tn.gov.in.

 

Tags :

Share via

More stories