அதிமுக கூட்டணியை தடுத்தது அன்புமணிதான்.. ராமதாஸ் ஆதங்கம்

by Editor / 29-05-2025 12:48:32pm
அதிமுக கூட்டணியை தடுத்தது அன்புமணிதான்.. ராமதாஸ் ஆதங்கம்

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று சொன்னது அன்புமணி தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும் என்று ஆதங்கமாக பேசியுள்ளார். அன்புமணி ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு, தன்னை கட்சியில் இருந்து நீக்க நிறுவனர் முயல்கிறார் என பொய் பரப்பினார். இதனால், எனது கூட்டத்திற்கு 108 தலைவர்களில் வெறும் 8 பேர் மட்டுமே வந்தனர். அதனை கண்ட பிறகு அன்றே நான் இறந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via