திமுக வேட்பாளர்களை எதிர்த்து 2 வார்டுகளில் போட்டியிடும் திமுக நகர செயலாளர்.
தென்காசி வடக்கு மாவட்ட கடையநல்லூர் நகராட்சியில் திமுக சார்பில் 2011ஆம் ஆண்டு நகர்மன்றத் தலைவராக பணியாற்றிய சைபுன்னிஷா மற்றும் கடையநல்லூர் நகர திமுக செயலாளராக இருக்கும் அவரது கணவர் சேகனாஆகியோரும் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடையநல்லூர் நகரத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனுக்களை கட்சியில் வழங்கினர். ஆனால் இவர்கள் இருவருக்கும் கட்சியில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே நகர் மன்ற தலைவராக இருந்தவருக்கும், நகர செயலாளராக இருக்கும் நபருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் வழங்காமால் புதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடையநல்லூர் நகரத்தில் திமுக நகர செயலாளர் சேகனா திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடும் நபர்களை எதிர்த்து சுயேட்சையாக 2 வார்டுகளில் வேட்புமனுத் தாக்கல் செய்து போட்டியிடுவதால் கடையநல்லூரில் பரபரப்பு கூடியுள்ளது.
Tags : DMK city secretary contesting against DMK candidates in 2 wards.