சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம்

by Staff / 27-02-2024 03:52:59pm
சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம்

சென்னையில் திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா ரூ. 5 லட்சம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம். அபராதத் தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via