சந்திரபாபு நாயுடுக்கு கிடைத்தது நிபந்தனை ஜாமீன்

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் சமீபத்தில் இடைக்கால ஜாமினில் வெளிவந்தார். தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் சிறை செல்ல தேவையில்லை. அதோடு, வரும் 30ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :