முகமது ஷமிக்கு பிரதமர் மோடி ஆறுதல்

by Staff / 20-11-2023 05:15:48pm
முகமது ஷமிக்கு பிரதமர் மோடி ஆறுதல்

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்த நிலையில், இதுதொடர்பாக முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார். நேற்றைய நாள் எங்களுக்கு உண்டான நாளாக அமையவில்லை. ஆனால் இந்திய ரசிகர்கள் எங்களை மனப்பூர்வமாக ஆதரித்தார்கள். அதிலும் உடை மாற்றும் அறைக்கே வந்து பிரதமர் மோடி எங்களுக்கு ஆறுதல் கூறினார். விரைவில் புது உற்சாகத்துடன் மீண்டு வருவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories