பாராட்டு விழா- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:
அதிமுக-வில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என கோகுல இந்திரா பொது இடத்தில் பேசவில்லை. அவர் வேறு இடத்தில் நடந்த உள்ளரங்க நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை
அத்திக்கடவு-அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்த பாராட்டு விழா விவசாயக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. அது அதிமுக நிகழ்ச்சி அல்ல என்று - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெ படங்கள் இல்லை எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற விழாவை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : பாராட்டு விழா- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.