ராம நவமி இன்று கோலகலாமாக கொண்டாடப்பட்டது

by Writer / 10-04-2022 06:37:30pm
ராம நவமி இன்று கோலகலாமாக கொண்டாடப்பட்டது



இந்து கடவுள்களில் காக்கும் கடவுளான பெருமாள் ,எப்பொழுதெல்லாம் அதர்மம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் நான் அவதாரம் எடுத்து இந்த பூமியை காப்பேன் என்று கீதாஉபதேசத்தில் அருளப்பட்டுள்ளது.பத்து அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரம்.அதன்படி விஷ்ணு ,ராம அவதாரம் எடுத்து அநீதிக்கு எதிரானவர்களை தம் வில்லாற்றலால்,தசரத சக்கரவர்த்திக்கு மகனாக அவதரித்த ஸ்ரீராமபிரானின் புனித தினம் இந்தியாவெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ராமர் கோவில் அதிக அளவில் இல்லை. ஆனால்.ராம அவதார காப்பியமான கம்ப ராமாயணம் சிறப்படைந்ததோடு ராமன்,சீதை,அனுமான் குறித்த தெய்வீக சிந்தனை வளர்ந்தது.பட்டிமன்றங்கள் வழி பாமரர்களும் ராம அவதாரச்சிறப்பை உணர்ந்தனர். ராமாயண கதைகளை அடிப்படையாகக்கொண்டு திரைப்படங்கள் அதிக அளவில் வந்துள்ளன.இருப்பினும்,தமிழ்நாட்டில் ராம நவமி  பெரிதாகக்கொண்டாடப்படுவதில்லை.   வட இந்தியாவில், ராம நவமி ஒரு முக்கிய இந்து மத விழாவாகும்.

 

Tags :

Share via