“முதலமைச்சர் நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்" - மு.க. அழகிரி

அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் வீடு திரும்புவதாக மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். முதலமைச்சரை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, “மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக உள்ளார். நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்” என தெரிவித்துள்ளார். முன்னதாக. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சீரற்ற இதயத்துடிப்பு இருந்தால் இன்று காலை ஆஞ்சியோ செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
Tags :