மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லேப் டெக்னீசியன் கைது.

by Editor / 25-10-2023 10:01:10am
 மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லேப் டெக்னீசியன் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சென்னை மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றார்கள் இதுபோக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான டாக்டர்களும் பயிற்சி டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்

அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் இரண்டு பேர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சுந்தரவாணத்திற்கு இணையத்தளம் மூலமாக தனித்தனியாக இரண்டு புகார் மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுக்களின் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி லேப் டெக்னீசியனாக பணியாற்றி வரும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வைரவன் என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதக்க தகவல் வெளியாகியுள்ளது.இதைத்தொடர்ந்து அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் உத்தரவிட்டார் அதன் பெயரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் பின்னர் அதிரடியாக வைரவனை கைது செய்தனர். கைதான வைரவனுக்கு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது இந்நிலையில் தான் அவர் பாலியல் புகாரில் சிக்கியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :  மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லேப் டெக்னீசியன் கைது.

Share via

More stories