கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு சர்ச் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி கவுசல்யா (வயது 40).இவர் தனது 12 வயது மகனுடன் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் கையில் பெட்ரோல் கேன் வைத்தி ருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவுசல்யா கையில் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர். பின்னர் அவரிடம் விவரங்களை கேட்டறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஈத்தாமொழி போலீசாரை தொடர்பு கொண்டு தகவலை தெரி வித்தனர். நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.இது குறித்து கவுசல்யா கூறுகையில், எனது வீட்டிற்குள் புகுந்த கும்பல் சரமாரியாக என்னை தாக்கியதுடன் வீட்டுக்குள் இருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியது. வீட்டின் முன்பு நின்ற எனது கணவரின் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினார்கள். இது தொடர்பாக ஈத்தா மொழி போலீசில் புகார் செய்தேன். போலீசார் விசாரணை நடத்தினார்கள். சேதமடைந்த மோட்டார் சைக்கிளை சரி செய்து தருவதாக போலீசார் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளை சரி செய்து தரவில்லை. இந்த நிலையில் நேற்று அந்த கும்பல் மீண்டும் என்னையும் எனது மகனையும் தாக்கியுள்ளது. சம்பந்தப் பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நானும் எனது மகனும் கலெக்டர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்ய வந்ததாக தெரிவித்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Tags :