ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்

மத்திய பிரதேசத்தில் கடந்த 6ம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்தான். பெதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் தன்மய் சாஹு என்ற சிறுவன் வயலில் விளையாடிக் கொண்டிருந்த போது 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவன் 50 அடி ஆழத்தில் சிக்கினான். சிறுவனைக் காப்பாற்ற அதிகாரிகள் 4 நாட்கள் கடுமையாக போராடினர். ஆழ்துளை கிணற்றுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது.எனினும் சிறுவன் உயிர் பிழைக்கவில்லை. ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக ஒரு சுரங்கப்பாதை தோண்டி சிறுவன் வெளியே எடுக்கப்பட்டான், ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிர் இழந்திருந்தான். சிறுவன் இறந்ததற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags :