விசிக பெண் கவுன்சிலர் திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரால் கொலை செய்யப்பட்டார்.

by Staff / 04-07-2025 09:37:17am
விசிக பெண் கவுன்சிலர் திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரால் கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்: திருநின்றவூரைச் சேர்ந்தவர் விசிக நகரச் செயலாளர் ஸ்டீபன். இவரது மனைவி கோமதி வார்டு கவுன்சிலராக உள்ளார். இருவரும் காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். அண்மைகாலமாக கோமதி ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கோமதி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற ஸ்டீபன் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து ஸ்டீபன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியை வெட்டியுள்ளார்.இதில் கோமதி பரிதாபமாக பலியானார் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற கோமதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். மனைவி கோமதியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார். 

 

Tags : A female councilor from Visika was murdered by her husband due to an extramarital affair.

Share via