இன்று கர்நாடகாவில் யாத்திரையை தொடங்குகிறார் ராகுல்

by Editor / 30-09-2022 12:13:19pm
இன்று கர்நாடகாவில் யாத்திரையை தொடங்குகிறார் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் நடைபயண யாத்திரை  கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,571 கி.மீ வரை  ராகுல் காந்தி தலைமையில் கடந்த  7ஆம் தேதிதொடங்கியது.இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரை கன்னியாகுமரியிலிருந்து கேரளமாநிலம் சென்று ங்கிறாருந்து கர்நாடகா சென்றது.கர்நாடகாவில் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று தொடங்குகிறது.

குண்டல்பேட்டையில் இருந்து காலை 9 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது. கர்நாடகாவில் 21 நாட்களுக்கு யாத்திரை நடத்தப்படுகிறது. ஏழு மாவட்டங்கள் வழியாக 511 கி.மீ., பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.இந்த யாத்திரையின் போது விவசாயிகள், தலைவர்களை ராகுல் சந்திக்கிறார்.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் யாத்திரையை 
 தொடங்கியுள்ளார்.ராகுல் காந்தியின் பயணத்தில் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் வரும் நாட்களில் கர்நாடகாவுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via