கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக 14 அதிகாரிகள் மீது வழக்கு.

காவல்துறை உயர் அதிகாரிகளின் உதவிக்கு என பணி அமர்த்தப்பட்ட ஆர்ர்லி பயிற்சி பெற்ற சீருடை பணியாளர்கள் காலப்போக்கில் உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்துக்கே வேலை செய்யும் அளவிற்கு ஒருபுறம் என்றால் சிறை கைதிகளை சிறைத்துறை உயரதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைக்கு உட்படுத்துவது தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும் நடைமுறையாகவே உள்ளது ஆனால் ஆயுள் தண்டனை கைதியான தனது மகன் சிவகுமாரை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலக்ஷ்மி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியதாக அவரது தாய் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தற்போது கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அனைத்து சிறை அதிகாரிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது அழகை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் சிவஞானம் தலைமையிலான அமர்வு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டது அதன் பேரில் வேலூர் மத்திய சிறையில் விசாரணை நடத்திய வேலூர் முதன்மை குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகள் கைதி சிவக்குமாரை சட்ட விரோதமாக வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது இதை அடுத்து தவறு செய்த வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர் அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட கைதி சிவக்குமாருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் அவரை உடனடியாக வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர் அதன் பேரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உட்பட சிறை அதிகாரிகள் 14 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் சிறை கைதியை தனிப்பட்ட முறையில் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றது ஏன் என சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமியிடம் கேள்வி எழுப்பிய சிபிசிஐடி போலீசார் ஆயுள் கைதியை தாக்க கூடாது என்பது சிறைத்துறை டிஐஜிக்கு தெரியாத எனவும் இடுக்கி பிடி விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறதுவேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு.பிறருக்கு காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோத சிறைவைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி
Tags : கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக 14 அதிகாரிகள் மீது வழக்கு.