மின்சார ரயில் மோதி காதலர்கள் பலி

தாம்பரம் அடுத்த வண்டலூர் ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் நேற்று (பிப்.11) நள்ளிரவு ஒரு இளைஞர் மற்றும் இளம்பெண் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில், இருவரும் கடலூரை சேர்ந்த விக்ரம் (21), ஆதிலட்சுமி (22) என தெரியவந்தது. காதலர்களாக இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று இரவு பேசிக்கொண்டு நடந்துசென்ற இருவரும் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போது மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
Tags :