தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு மூலம் மதி என்ற சிறுதானிய உணவகம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த உணவகத்தில் இருந்த சிலிண்டரானது திடீரென தீப்பிடித்த நிலையில், உணவகத்தில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த தீ அணைப்பான்களை பயன்படுத்தி சக ஊழியர்கள் கேஸ் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்த நிலையில் பெரும் அசம்பாவிதமானது தவிர்க்கப்பட்டது.
இருந்தபோதும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுதானிய உணவகத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்து சம்பவம் ஊழியர்களிடையே சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags : தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து.



















