10 கோடியை கடந்த அகதிகள் எண்ணிக்கை-ஐநா அமைப்பு கவலை

சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் 10 கோடியை கடந்திருப்பதாக ஐநா அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. எத்தியோப்பியா, புர்கினா ஃபாசா, மியான்மர், நைஜீரியா, ஆப்கனிஸ்தான், காங்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 9 கோடியாக இருந்ததாகத் தெரிவித்துள்ள ஐநா அகதிகள் அமைப்பின் தலைவர் ஃபிலிப்போ கிரான்டி, நடப்பாண்டில் உக்ரைன் போர் காரணமாக 1.6 கோடி மக்கள் இடம் பெயர்ந்ததால் இந்த எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Tags : The number of refugees past 10 crore — the UN refugee organization is concerned