ஓபிஎஸ் NDA கூட்டணியில் இருந்து விலகல்? பரபரப்பு அறிக்கை

NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் அண்மையில் கடிதம் மூலம் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தும் பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இந்நிலையில், தனக்கு முக்கியத்துவம் தராத NDA கூட்டணியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ள ஓபிஎஸ், முன்னோட்டமாக இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்
Tags :