பாமகவை பலவீனப்படுத்த திமுக ஒரு சூழ்ச்சி வலையை பின்னுவதாகஅன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
இன்று பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. என் கூட்டத்தில் தலைமை ஏற்று உரையாற்றிய அன்புமணி ராமதாஸ் பாமகவின் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரங்களுக்கும் திமுக தான் காரணம் என்று குற்றச்சாட்டை முன் வைத்தார். பாமகவின் உட்கட்சி விவகாரங்களில் திமுக தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் தடுக்கவும் பாமகவை பலவீனப்படுத்தவும் திமுக ஒரு சூழ்ச்சி வலையை பின்னுவதாகவும் கட்சிக்குள் இருந்து கொண்டே திமுகவுடன் இணைந்து செயல்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் பாமகவை யாராலும் உடைக்க முடியாது என்றும் அவர் பேசினார் .திமுக ஆட்சி தமிழக வரலாற்றிலேயே மிகவும் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகாரம் செய்து உள்ளதாகவும் இப்போது உள்ள சூழல் சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Tags :



















