பாதுகாப்புப் பணியில் மயங்கி விழுந்து உயிரிழந்த உதவி ஆணையர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி.

by Editor / 01-09-2024 09:07:10am
பாதுகாப்புப் பணியில்  மயங்கி விழுந்து உயிரிழந்த உதவி ஆணையர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றிவந்த சிவகுமார் (53) நேற்று (ஆக.31) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சிவகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர், ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : பாதுகாப்புப் பணியில் மயங்கி விழுந்து உயிரிழந்த உதவி ஆணையர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி.

Share via