மதுரையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு; நான்கு பேர் பணியிடை மாற்றம்.

by Editor / 10-09-2024 05:58:28pm
மதுரையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு; நான்கு பேர் பணியிடை மாற்றம்.

இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாடு சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின்  
மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று  ஆய்வு மேற்கொண்டார்.4 அலுவலர்களின் தொய்வான பணிகள் காரணமாக பணியிட மாறுதல்கள் வழங்கிட உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாடு சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் 09.09.2024 (திங்கள் கிழமை) நேற்று  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   நடைமுறைப்படுத்தி வரும் அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வின் போது இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாடு சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சில அலுவலர்களிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கைகள் காரணமாக வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டாட்சியரும், ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒரு சுகாதார ஆய்வாளரும் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் இரண்டு விடுதி காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

Tags : மதுரையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு நடத்தியதின் எதிரொலியாக நான்கு பேர் பணியிடை மாற்றம்

Share via