கலவரத்தை தூண்டப் பார்க்கிறார் அமித்ஷா - ஆ. ராசா

திமுக எம்பி ஆ.ராசா சென்னையில் இன்று (ஜூன் 9) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தமிழ்நாட்டைப் பார்த்து பயந்ததால்தான் 5 முறை பிரதமர் இங்கு வந்து பரப்புரை செய்தார். பாஜக எது செய்தாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை என்பதால்தான் பயப்படுகின்றனர். மதவாத பிளவை உண்டாக்கி கலவரத்தை தூண்டப் பார்க்கிறார் அமித்ஷா. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Tags :