பாஜக எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

by Staff / 14-02-2023 04:28:56pm
பாஜக எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

காசோலை மோசடி வழக்கில் கர்நாடகாவின் மூடிகெரே தொகுதி பாஜக எம்எல்ஏ எம்பி குமாரசாமிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குமாரசாமி, ஹோவப்ப கவுடா என்பவரிடம் ரூ.1.35 கோடி கடன் வாங்கினார். கடனை அடைக்க 8 காசோலைகளை குமாரசாமி வழங்கினார். காசோலைகளை வங்கியில் டெபாசிட் செய்தபோது அதில் தொகை இல்லாமல் இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம் குமாரசாமிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

 

Tags :

Share via