கடந்த11 நாட்களில் எரிபொருள் விலைகள் 6-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன.

by Admin / 27-05-2026 03:10:11am
கடந்த11 நாட்களில் எரிபொருள் விலைகள் 6-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன.

 எரிபொருள் மற்றும் சி. என். ஜி விலை உயர்வு பொதுமக்களை நேரடியாக பாதிக்க கூடிய ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மிக குறுகிய காலத்தில் விலைகள் இவ்வாறு உயர்வது போக்குவரத்து செலவுகளையும் அத்தியாவசிய பொருள்களின் விலையையும் அதிகரிக்க செய்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் வரிவிதிப்புக்கள் மற்றும் விநியோக சங்கிலி தடங்கல்கள் போன்ற பல்வேறு காரணிகளால் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது. கடந்த பத்து நாட்களில் எரிபொருள் விலைகள் ஐந்தாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. ஜி. என் .ஜி. விலையும் ஆறு ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 83 .09 ஆக உள்ளது..வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. இந்தச் சூழல் நாட்டின் பொருளாதாரத்தில் சில முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரிக்கும்.போது கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக விலை உயர்கிறது. இந்தியா தனது தேவையில் 80 விழுக்காடுக்கும் அதிகமான கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதால் எண்ணெய் விலை உயர்வு உள்நாட்டு பண வீக்கத்தை நேரடியாக அதிகரிக்க செய்கிறது உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால் நிறுவனங்களின் லாபம் குறைந்து நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும். உலகளாவிய பதற்ற நிலை நிலவும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் உள்ள தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்று பாதுகாப்பான தங்க நாணயங்கள் அல்லது அமெரிக்க டாலர்களில் முதலீடு செய்ய தொடங்குவார்கள். சந்தை சரிவின்போது பயந்து போய் பங்குகளை நஷ்டத்திற்கு விற்பதை பலர் செய்யக்கூடும். வலுவான அடித்தளம் கொண்ட நிறுவனங்களின் பங்குகள்  பின்னர் மீண்டு எழக்கூடிய சூழலும் உருவாகலாம். அதனால் முதலீடுகளை பங்குச்சந்தை மட்டமின்றி தங்கம், நிலையான வைப்பு நிதி போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பங்கு முதலீட்டாளர்கள் தயாராக வேண்டிய நிலை ஏற்படும். 

சென்னையில்,

பெட்ரோல் விலைஒரு லிட்டருக்கு,
                             

                                27,மே-2026    108.20
                                26, மே 2026 : ₹107.77 /லி
                                25, மே 2026 : ₹107.74 /லி
                                24, மே 2026 : ₹105.27 /லி

டீசல் விலை :

                             ஒரு லிட்டர் 27 ,மே,2026    99.98

  •  
 

Tags :

Share via
Logo