கர்நாடகா அடுத்த முதலமைச்சராக கட்சி தலைவர் துணை முதல்வர் டி .கே .சிவகுமார் ?

by Admin / 27-05-2026 02:58:58am
கர்நாடகா அடுத்த முதலமைச்சராக கட்சி தலைவர் துணை முதல்வர் டி .கே .சிவகுமார் ?

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவராக டி. கே .சிவகுமார் இருந்து வருகிறார். கர்நாடக முதலமைச்சராக சித்தராமய்யா பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், 2023 அமைச்சரவை நிறுவுகிற நேரத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி சுழற்சி அடிப்படையில் துணை முதல்வராக இருக்கும் டி.கே சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நாளை மறுநாள் சித்ராமய்யா தம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல். டெல்லி காங்கிரஸ் கட்சி பேச்சு வார்த்தையில் அடுத்த முதலமைச்சராக கட்சி தலைவர் துணை முதல்வர் டி கே சிவகுமார் ஒப்புதல் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து வெளியிடுவார் என்று தெரிய வருகிறது. முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையாவிற்கு கட்சியின் அகில இந்திய அளவில் பதவி வழங்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via
Logo