மக்கள் தொகை மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்பு உயர்மட்ட குழு -மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

by Admin / 27-05-2026 02:46:39am
மக்கள் தொகை மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்பு உயர்மட்ட குழு -மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லையோர மாவட்டங்களில் ஏற்படும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்பு உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். எல்லை தாண்டிய சட்டவிரோத ஊடுருவலை கடுமையாக கையாளுக வேண்டும் என்றும் எல்லையோர பகுதிகளில் திடீரென ஏற்படும் அசாதாரண மக்கள் தொகை மாற்றங்களை கண்டறிந்து அவற்றை களைய வேண்டும் என்றும் நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முக்கியமாக பங்காளதேஷ் மற்றும் மியான்மர் எல்லைகளை ஒட்டி உள்ள இந்திய மாநிலங்களில் இந்தக் குழு அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கம் ,அசாம், திரிபுரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் எல்லையோர மாவட்டங்களில் இக்குழு முக்கிய பங்காற்றும் என்று தெரிகிறது.

 

Tags :

Share via
Logo