முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை இயக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்
இந்திய ரயில்வே நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை இயக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே இந்த ரயிலை இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்கி உள்ளது. இந்த ரயில் ஹரியானா மாநிலத்தின் டெல்லி உட் ஜிந்த்-சோனி பட் இடையே ஆன 89 கிலோமீட்டர் தூர பாதையில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன 10 பெட்டிகளை கொண்ட ரயில் சென்னை ஐ .சி. எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 1200 கிலோ பால் திறன் கொண்ட டி.பி.ஆர்.எஸ் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது டீசல் அல்லது மின்சாரத்திற்கு பதிலாக ஹைட்ரஜரை பயன்படுத்துவதால் புகைக்கு பதிலாக நீர் ஆவியை மட்டுமே வெளியேற்றும். இதனால் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு சாத்தியமாகிறது. இதற்காக அரியானாவின் ஜிந்த் பகுதியில் பிரத்தியேக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மற்றும் மூவாயிரம் கிலோ சேமிப்பு திறன் கொண்ட எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீன ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
Tags :


















