தமிழக வெற்றி கழக ஊராட்சி மன்ற தலைவர் வீராச்சாமி ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது
திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கல்பட்டு மாவட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராச்சாமி ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மாம்பாக்கம் பகுதியில் ஒன்பது புள்ளி 80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரரிடம் நிலுவைத் தொகையை விடுவிக்க வீராசாமி தனது அலுவலகத்தில் வைத்து 1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வெளியான வீடியோ கூகுள் பே வலி பண பரிமாற்ற ஆதாரங்கள் வெளியான நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு வகித்த அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கினார் த வெ க மாவட்டச் செயலாளர். இதனைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் நவீன் அளித்த புகாரின் பேரில் தாழம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் தலைமையில் வீராசாமி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டார். இத்தருணத்தில் வீராசாமி தான் கடன் கொடுத்த பணத்தை தான் திரும்பப் பெற்றதாகவும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறியதன் காரணமாக முதலமைச்சர் மீது அவதூறை பரப்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தெரிவித்தார்.
Tags :



















