பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தின் பத்திர பதிவை ரத்து செய்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

by Admin / 16-07-2026 07:22:22am
 பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தின் பத்திர பதிவை ரத்து செய்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

 பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தின் பத்திர பதிவை ரத்து செய்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

 பழனி மலை அடிவாரத்தில் பழனி முருகன் கோவில் வனத்திற்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் 1888 ஆம் ஆண்டு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலத்தை பொதுமக்களின் வாகன நிறுத்தமாக பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்த இடத்தை கடந்த ஜூலை ஆறாம் தேதி தனி நபர்கள் சிலரின் பெயருக்கு நிலம் இரண்டு கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் கிரைய பத்திரம் செய்யப்பட்டது. நிலத்தின் உண்மை தன்மையை மறைத்து நிலத்தை பதிவு செய்யக்கோரி தனி நபர்கள் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் ஆவணங்கள் சரியாக இருந்தால் பதிவு செய்யலாம் என்று தனி நீதிபதி உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து இந்த நிலம் தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. நூறு கோடி மதிப்புடைய நில  மோசடி நடந்தது தொடர்பாக எதிர்மனுதாரராக மடத்தையோ அல்லது கோவில் தக்காரையோ தனி நீதிபதி சேர்க்காமல் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி பிறப்பித்த அந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று கூறி இருவர் அமர்வு அதை ரத்து செய்தது கோவில் அல்லது மனங்களின் சொத்துக்களை பதிவு செய்யும்போது சார்பதிவாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தே பின்பே பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டனர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பழனி பொறுப்பு சார்பதிவாளர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் மோசடி ஈடுபட்ட சார்பதிவாளர் மற்றும் நிலத்தை வாங்கிய தனிநபர்கள் மீது ஏமாற்றுதல் போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் பழனி அடிவார காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடி வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo