16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்

by Staff / 22-04-2024 03:28:37pm
16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்

உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோஹா நகரை சேர்ந்த அமன் என்ற 16 வயது சிறுவன் நேற்று மதியம் 3 மணியளவில் தனது வீட்டில் உட்கார்ந்தபடி செல்போனில் மூழ்கியிருந்தான். அப்போது மூச்சு விடுவதில் சிரமத்தை சந்தித்ததோடு நெஞ்சு வலியும் ஏற்பட்டது. தொடர்ந்து குடும்பத்தார் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் இறந்துவிட்டதாகவும், அதற்கு காரணம் மாரடைப்பு எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அமனுக்கு உடல் நலப்பிரச்சனை ஏதும் இல்லை என குடும்பத்தார் கூறினர்.

 

Tags :

Share via