ராகுல் நடைபயணம் - கமல் பங்கேற்பு

இந்தியா முழுவதும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைப்பெறும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.இதுகுறித்து பேட்டியளித்த மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது பாதயாத்திரை குறித்து தற்போது ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதை, என் பயணத்தை தெரிந்துகொண்டாலே உங்களுக்கு புரியவரும் எனவும், ஓரிரு வாரங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
Tags :