இந்து முன்னணி மாவட்ட செயலாளருக்கு வெட்டு,மனைவி வெட்டிக் கொலை.

நாமக்கல்: பரவத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் கீதா (37) எனவும் அவர் கணவர் ஜெகதீசன் (40) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். படுகாயங்களுடன் ஜெகதீசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : இந்து முன்னணி மாவட்ட செயலாளருக்கு வெட்டு,மனைவி வெட்டிக் கொலை