ஒரே நாடு ஒரே தேர்தல்-எடப்பாடி ஆதரிப்பது வேடிக்கை: உதயநிதி

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் வீட்டு படிக்கட்டுகளை கூட தாண்ட கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தி இருந்த நிலையில் தற்போது நமது பெண்கள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல உயரங்களை தொட்டு வருவதாக பாராட்டியுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்றம் அதன் பின்னர் உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்த அதிமுக தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆதரிப்பது வேடிக்கையாக உள்ளதாக சாடினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்த்ததை போல தற்போதும் திமுக எதிர்ப்பதாக உதயநிதி தெரிவித்தார். விஸ்வகர்மா திட்டத்தால் பிரதமர் மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் படும் தோல்வியை சந்திப்பார் என அவர் உறுதிபட கூறினார்.
Tags :