அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

by Staff / 05-05-2022 01:54:30pm
அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எளிதாக ஆங்கிலம் கற்கவும் பேசவும் கூகுள் கூகுள் ரீட் அலோன் என்ற செயலி அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் 180 ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 208 அரசு பள்ளிகளில் ஆய்வக கட்டிடங்கள் கழிவறை ஆகியவற்றையும் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் இளந்தளிர் இலக்கியம் திசைதோறும் திராவிடம் ஆகிய திட்டங்களின் கீழ் 28 நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

 

Tags :

Share via