சிபிஐ விசாரணையில் பயனில்லை-புதிய தமிழகம் கிருஷ்ணசாமிஆவேசம்.

by Editor / 30-06-2024 11:42:37pm
சிபிஐ விசாரணையில் பயனில்லை-புதிய தமிழகம் கிருஷ்ணசாமிஆவேசம்.


பூரண மதுவிலக்கு ஒன்று  தான் கள்ளச்சாராய விவகாரத்தில் தீர்வாக இருக்கும் என்றும் சிபிஐ விசாரணையில் பயனில்லை எனவும் தமிழக அரசு மதுபானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குடிநீருக்கு கொடுக்க வேண்டும் என புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் தனியார் பங்களாவில் தென்காசி பாராளுமன்ற தேர்தலில் முழு ஒத்துழைப்பு வழங்கிய புதிய தமிழகம்  கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது பூரண மதுவிலக்கு மட்டுமே கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் போன்ற விவகாரத்திற்கு தீர்வாக இருக்கும் எனவும் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் பூரண மதுவிலக்குக்கு ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் எனவும் அதைவிடுத்து சிபிஐ விசாரணையில் எந்த ஒரு பயனும் இருக்காது எனவும் அதில் பெரிய முதலைகள் மாட்டாது எனவும் அவர் காட்டமாக தெரிவித்தார் மேலும் தமிழக அரசு மதுபானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குடிநீர் வழங்குவதிலும் கொடுக்க வேண்டும் எனவும் நீட் விவகாரத்தில் ரத்து தீர்மானத்தை சட்டப்பேரவையில் தமிழக அரசு கொண்டு வந்தது குறித்து பேசிய அவர் நடைபெறாத விஷயத்தை செய்வதுதான் திமுக அரசாங்கம் எனவும் நீட் விவகாரம் நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய முடிவெடுக்க வேண்டிய விவகாரம் எனவும் அதை பஞ்சாயத்தில் பேசுவது எந்த பயனும் இல்லை எனவும் அவர் சட்டப்பேரவை தீர்மானத்தை குறிப்பிட்டு பேசினார்

 

Tags : சிபிஐ விசாரணையில் பயனில்லை-புதிய தமிழகம் கிருஷ்ணசாமிஆவேசம்.

Share via