11வது நபருடன் திருமணம்.. கல்யாண ராணிக்கு காப்பு.

by Staff / 07-06-2025 10:37:08am
 11வது நபருடன் திருமணம்.. கல்யாண ராணிக்கு காப்பு.

கேரளாவின் எர்ணாகுளம், காஞ்சிராமட்டத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா  ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து திருமண வரன் தேடி 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பலே மோசடி கல்யாண ராணியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது 11வது திருமணத்திற்காக மணப்பெண் போல உடையணிந்து மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, ​​ரேஷ்மாவை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 11வது மாப்பிள்ளையான பஞ்சாயத்து உறுப்பினர் ரேஷ்மா மீது சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் அளித்த நிலையில், உண்மை தெரியவந்தநிலையில் ரேஷ்மா. இப்போது கம்பிஎண்ணத்தொடங்கியுள்ளார்.

 

Tags : 11வது நபருடன் திருமணம்.. கல்யாண ராணிக்கு காப்பு

Share via