by Staff /
09-07-2023
12:22:44pm
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக வரும் ஜுலை 11ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த தினம் கோவை சரக டிஜஜி தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சரின் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கவும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
Tags :
Share via