by Staff /
09-07-2023
12:26:26pm
வட இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட துவங்கியது. ஜூலை 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் வட இந்தியாவின் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.<br />
Tags :
Share via