நைஜீரியாவின் கிராமங்களில் நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல்170 முதல் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

by Admin / 05-02-2026 09:33:46am
நைஜீரியாவின் கிராமங்களில் நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல்170 முதல் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல்களில் குறைந்தது 170 முதல் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் மேற்கு நைஜீரியாவில் உள்ள குவாரா மாநிலத்தில் உள்ள வோரோமற்றும் நூகு ஆகிய கிராமங்களிலும், வடக்கு மாநிலமான கட்சினாவிலும் நிகழ்ந்தன.குவாரா மாநில வோரோ கிராமத்தில் 170 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ரெட் கிராஸ் அமைப்பு 162 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. தேடுதல் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய இந்த தாக்குதலில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் வோரோ கிராமத்திற்குள் புகுந்து கடைகள் மற்றும் உள்ளூர் தலைவரின் அரண்மனைக்குத் தீ வைத்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இத்தாக்குதல்களை லகுராவா  என்ற ஆயுதமேந்திய குழு நடத்தியதாகக் கருதப்படுகிறது. இக்குழு 'இஸ்லாமிய அரசு'அமைப்புடன் தொடர்புடையது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.. கட்சினாவில் உள்ள டோமா கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வீடு வீடாகச் சென்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்.கிழக்கு போர்னோ மாநிலத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்தனர்.கடந்த இரண்டு வாரங்களில் நடந்த மோதல்களில் சுமார் 144 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
நைஜீரியாவின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவும் நிலப் பிரச்சனைகள், இன மோதல்கள் மற்றும் ஆயுதமேந்திய கும்பல்களின் (bandits) அச்சுறுத்தல் காரணமாக இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

 

Tags :

Share via

More stories