ஏடிஜிபி ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை பரிந்துரை.

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. பணியிடை நீக்கம் தொடர்பான உத்தரவை உள்துறை செயலாளர் பிறப்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏடிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக இளைஞரின் சகோதரரை கடத்திய புகாரில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்புள்ளதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
Tags : adgp ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை பரிந்துரை