75ஆவது படம் அன்னபூரணி- நயன்தாராவிற்கு இது ஒரு வெற்றி படமாக அமையும்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75ஆவது படம் அன்னபூரணி. நேற்று ,உலகமெங்கும் வெளியானது .நயன்தாரா ,ஜெய் ,சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜவான் படத்திற்குபிறகு .நயன் தாரா நடித்த தமிழ் படம் அன்னபூரணி.. அக்ரஹாரத்து, பெண்ணாக.நயன்தாரா இந்த படத்தில் நடித்துள்ளார்.. இன்றைக்கு மாமிச உணவுகள் விதவிதமான நிலைகளில் தயார் செய்யப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன .சைவ குடும்பத்தில் பிறந்த நயன்தாராவிற்கு அசைவ உணவின் மீது ஒரு ஆசை- வேட்கை .அதை அவர் நிறைவேற்றிக் கொள்வதற்காக, எந்த மாதிரியெல்லாம் போராடுகிறார் என்பது தான் கதைக்களம்.. அன்னபூரணி படத்தில் மீதான எதிர்பார்ப்பை ட்ரைலர் அதிகப்படுத்திருந்த நிலையில், எப்பொழுது, இந்த படம் வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து கொண்டிருப்பதன் காரணமாக, நேற்று திரையிடப்பட்ட திரையரங்குகளில் வசூல் அதிகமாக எதிர்பார்த்த மாதிரியாக இல்லாவிட்டாலும் 60 லட்சத்தை தாண்டி இருப்பதாக சொல்லப்படுகிறது .இன்று சனி நாளை ஞாயிறு என்கிற நிலையில் விடுமுறை தினமாக இருப்பதனால், படம் எதிர்பார்த்த வசூலை வாரி குவிக்கும் என்று பட தயாரிப்பு நிறுவனம் நம்பிக் கொண்டிருக்கிறது. 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் .நிச்சயமாக அதிக லாபத்தை ஈட்டி தரும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர் படத்திற்கான விமர்சனங்களும் சாதகமாக உள்ளதால், நயன்தாராவிற்கு இது ஒரு வெற்றி படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை..
Tags :